அதிரையில் சிறப்பாக தொடங்கிய பேட்மிட்டன் தொடர் போட்டி (படங்கள் இணைப்பு)

அதிரை பேட்மிட்டன் கிளப்(ABC) நடத்தும் முதலாம் ஆண்டு மின்னொளி இறகுபந்து போட்டி அதிரை கிரானி மைதானத்திற்கு பின்புறமாக உள்ள அரங்கம் இன்று தொடங்கியுள்ளது. இதில் அதிரை மற்றும் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, தம்பிக்கோட்டை, மதுக்கூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர்.  இன்று தொடங்கியுள்ள இந்த போட்டி நாளை 30 ஏப்ரல் 2017 அன்று பரிசளிப்பு விழாவுடன் நிறைவு பெறுகிறது. அதே போன்று மற்றும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான போட்டியும் நாளை 30 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Close