அதிரையில் 2-வது நாளாக நடைபெற்று வரும் அமைதியை நோக்கி கண்காட்சி! திரளாக வருகை தரும் மக்கள் (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரையில் நேற்றைய தினம் அமைதியை நோக்கி என்ற வாழ்வியல் கண்காட்சி துவங்கியது. 2வது நாளாக இன்று சேர்மன் வாடியில் உள்ள பழைய தனலெட்சுமி வங்கி இடத்தில் நடைபெற்று வரும் இந்த கண்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது.

இதில் நவீன விஞ்ஞானம், மரணத்துக்கு பிந்தைய வாழ்க்கை, பெண்ணுரிமை, குழந்தை வளர்ப்பு, குடும்பவியல், மனித படைப்பு, புத்தகங்கள், வீடியோ அரங்கம் ஆகியவை நடைபெறவுள்ளன. காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. இந்த கண்காட்சிக்காக நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பிரம்மாண்டமான அரங்கங்கள் அமைக்கப்ப்ட்டு அதில் வாழ்வியல் குறித்த பதாகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

இதில் ஏராளமான இஸ்லாமிய மாற்றுமத சகோதரர்கள் கலந்துகொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். அவர்களுக்கு இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள பதாகைகள் குறித்து விரிவுரையாளர்கள் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த விடுமுறை காலங்களில் இதனை ஒரு வாய்ப்பாக கருதி இந்த கண்காட்சிக்கு சென்று வாழ்வியல் குறித்த விளக்கத்தை பெற்றுகொள்ளலாம்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author