பொதக்குடி கால்பந்தாட்ட தொடரின் 2-வது லீக்கில் அதிரை WFC வெற்றி!

பொதக்கூடியில் ஒரு லட்சம் ரூபாய் பரிசித்தொகைக்கான பிரம்மாண்டமான கால்பந்தாட்ட தொடர்போட்டி நடைபெற்று வருகிறது. இதில் அதிரை WFC அணி கலந்துகொண்டு விளையாடி வருகிறது. இதன் 2-வது  லீக் போட்டியில் அதிரை WFC அணி புதுக்கோட்டை அணியை எதிர்த்து விளையாடியது. இதில் சிறப்பாக விளையாடிய WFC அணி எதிர் அணியினருக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தது. அந்த அணி வீரர் ராஜிக் ஒரு கோலை அடித்து அசத்தினார். அதே போல் எதிர் அணியினரும் ஒரு கோல் விளாச ஆட்டம் சமனிலையில் முடிந்தது.

இதையடுத்து வெற்றியாளரை தீர்மாணிப்பதற்காக டைபிரேக்கர் வைக்கப்பட்டது. அதில் WFC அணி மூன்று கோல்களை விளாசி வெற்றி பெற்றது. அந்த அணி தொடர் கோப்பையை கைப்பற்றிட அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close