அதிரையில் மழைவேண்டி TNTJ நடத்திய திடல் தொழுகையில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு! (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் பருவ மழை பொய்த்துப்போனதன் காரணமாக கோடையின் துவக்கத்தில் இருந்தே தண்ணீர் பஞ்சம் தலை தூக்க தொடங்கி உள்ளது. அது போக வெயிலும் 100 டிகிரை கடந்து வதைத்து வருவதால் மக்கள் கடும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் வெளியே தலை காட்டாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் அதிரையிலும் பெரு நகரங்களுக்கு போட்டிப்போட்டுக்கொண்டு வெயில் வாட்டி வருகிறது. கடந்த ஒருவாரமாக அதிரையில் 95 டிகிரிக்கும் மேல் வெப்பம் நிலவி வருகிறது. சென்னை, திருச்சி உள்ளிட்ட வெப்பம் அதிகமாக நிலவும் பெரு நகரங்களுக்கு இணையாக நமது அதிரையிலும் வெயில் அடித்து வருவதால் பொதுமக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இதையடுத்து இந்த கோடை வெப்பத்தில் இருந்து சற்று விடுபட மழை தேவைப்படுகிறது. இதன் காரணமாக அதிரையில் TNTJ மழை வேண்டி சிறப்பு மழைத்தொழுகை இன்று மே 2-ஆம் தேதியன்று காலை 7 மணியளவில் அதிரை பிலால் நகர் கிராணி மைதானத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான அதிரையர்கள் கலந்துகொண்டனர்.

Close