அதிரை கவியன்பன் கலாம் அவர்களுக்கு “கவிச்சக்கரவர்த்தி” பட்டம் வழங்கி கவுரவிப்பு! (படங்கள் இணைப்பு)

அதிரை தட்டாரத் தெருவை சேர்ந்தவர் “கவியன்பன்” கலாம். கவிதை ஆக்கத்தில் வல்லவராக திகழும் இவர் பல்வேறு தலைப்புகளில் இனிமையான கவிதைகளை எழுதி வருகிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக இவரது கவிப்பயணம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. நாளிதழ்கள், வாணொளிகளை கடந்து இன்றைய காலத்து அதிரை இணையதளங்களிலும், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் இவரது கவிதைகள் ஒலித்துக்கொண்டிருகின்றன.

பல விதமான பட்டங்களையும், விருதுகளையும் தனது கவிதைகளின் மூலமாக பெற்ற இவருக்கு மேலும் ஒரு கவுரவம் சேர்க்கும் விதமாக நேற்றைய தினம் சென்னையில் கவியுலகப் பூஞ்சோலை முகநூல் குழுமத்தின் முதலாம் ஆண்டு விழா நடைபெற்றது. இதில்   அதிரை கவியன்பன் கலாம் அவர்களுக்கு கவிச்சக்கரவர்த்தி விருதும் பட்டமும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதிரை பிறையின் மூத்த பதிவாளராகிய “கவியன்பன்” கலாம் அவர்களுக்கு சக பதிவாளர் என்ற முறையிலும், அதிரை பிறை சார்பாகவும் பாராட்டுக்களை தெரிவித்துகொள்வதோடு, இவரின் கவிப்பயணம் என்றும் தொடர அதிரை பிறை சார்பாக வாழ்த்துகிறோம்.

Close