வாடியக்காடு கிரிக்கெட் தொடரில் 3-ஆம் பரிசை தட்டிச்சென்ற அதிரை சிட்னி அணியினர்!

புதுக்கோட்டை மாவட்டம் வாடியக்காட்டில் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்றது. இதில், அதிரையை சேர்ந்த சிட்னி கிரிக்கெட் கிளப் அணியினரும் கலந்துகொண்டு விளையாடினர். இதில் சிறப்பாக விளையாடி சிட்னி அணியினர் எதிர்பாராதவிதமாக அரையிறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்தாலும், 3-வது பரிசுக்கான போட்டியில் வெற்றி பெற்று 3-வது பரிசை தட்டிச்சென்றனர். இந்த தொடரின் சிறந்த பேட்ஸ்மேனாக அதிரை சிட்னி வீரர் ரியாஸ் அஹமது தேர்வு செய்யப்பட்டார். அந்த அணியினருக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்.

Close