16 மில்லியன் செலவில் இலவச மருத்துவமனைக் கட்டி வரும் அப்ரிடி

பாகிஸ்தான் கிரிக்கெட் நட்சத்திரம் ஷஹித் அப்ரிதி பாகிஸ்தான் ருபாய் பதினாறு மில்லியன் செலவில் தான் பிறந்து வளர்ந்த கிராமத்தில் ஒரு வைத்தியசாலையை நிர்மாணித்து வருவதாக பாகிஸ்தானில் இருந்து வெளிவரும் நாழிதள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் விசேடமான அம்சம் என்னவென்றால் இம்மருத்துவமனையில் அனைத்து விதமான சேவைகளையும் இலவசமாக வழங்கப்படவுள்ளது.
இவ்வைத்தியசாலை கட்டுமானப்பணிகளை மேற்பார்வை செய்துவரும் அப்ரிதியின் மாமனாரான Sahibzada Fazle Khaliq இது தொடர்பாக குறிப்பிடும் போது ,வைத்தியசாலை கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் பொதுமக்களுக்கு சேவைகள் செய்வதில் பாகிஸ்தான் முன்னால் கிரிக்கட் வீரர் இம்ரான் கானை ரோல் மொடலாக கொண்டுள்ளதாகவும், இவ்வைதியசாலை தனது மருமகனால் தான் பிறந்து வளர்ந்த ஊருக்கும் ஏழை எளிய மக்களுக்கும் வழங்கும் அன்பளிப்பு என்றார்.
முன்னதாக ஷாஹித் அப்ரிதி தனது கிராமத்தின் பாதை நிர்மாணத்துக்கு ஒரு மில்லியன் அன்பளிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
-chenaichudar.com
Close