அதிரையர்களே!!! சின்ன உதவியை செய்வோம்… மிகப்பெரிய நன்மையை பெறுவோம்…

தமிழகத்தில், வரலாறு காணாத வறட்சி நிலவுகிறது. கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த ஆண்டு பருவமழை முற்றிலும் பொய்த்துபோனதால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது. புல்வெளி பரப்புக்கள் கருகி கட்டாந்தரைபோல் காட்சியளிக்கிறது.

இதனால் ஆடு, மாடுகள் குடிப்பதற்குகூட ஏரி, குளங்களில் தண்ணீர் இன்றி பாலை நிலம் போல் காட்சியளிக்கிறது. கால்நடைகளுக்கு இயற்கையான தீவனமும், குடிக்க தண்ணீரும் கிடைக்காததால் இந்த கோடையில் கால்நடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

நமக்கு தண்ணீர் அல்லது உணவு தேவை என்றால் வாய்திறந்து கேட்டுவிட்வோம். ஆனால் வாயில்லா ஜீவன்களுக்கு அது முடியாது. எனவே அவற்றின் தேவையை உணர்ந்து நமது வீட்டுகள் வாசலில் தண்ணீர் வைத்தால் அந்த வழியாக செல்லும் கால்நடைகள் களைப்பாறும். இந்த சிறிய விசயத்திஜை செய்வதன் மூலம் நாம் பெரிய நன்மைகளை அடையலாம்.

படங்கள்: சாகுல் ஹமீது (மணிச்சுடர் நிருபர்)

Close