அதிரையில் மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

தற்போது 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நிறைவு செய்த மாணவர்கள் உயர்கல்வி குறித்த யோசனையிலும், அதற்கான பணிகளில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், அவர்களுக்கு உயர்கல்வி குறித்த தெளிவை ஏற்படுத்தும் வகையில் அதிரை ஏ.எல் மெட்ரிகுலேசன் பள்ளியில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்று 03-05-2017 மாலை 4 மணியளவில் துவங்கி நடைபெற்றது.

இதில் சென்னை காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ்துறை பேராசிரியர் ஹாஜாகனி மற்றும் பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரியின் தமிழ்துறை தலைவர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்கள் உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்து தெளிவுபடுத்தினர். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

Close