பாப்பநாட்டில் நடைபெற்ற கிரிகெட் தொடரில் அதிரை AFCC சாம்பியன் (படங்கள் இணைப்பு)

பாப்பநாட்டில் தலை சிறந்த பல அணிகள் கலந்துகொண்ட கிரிக்கெட் தொடர்போட்டி நடைபெற்றது. இதில் அதிரை AFCC அணியும் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் AFCC அணியை எதிர்த்து KSCC ஆம்பலப்பட்டு அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட் செய்த AFCC அணி 4 ஓவர்களில் 3 விக்கெடுகளை இழந்து 30 ரன்களை குவித்தது.

இதையடுத்து களமிறங்கிய KSCC அணி 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் அதிரை AFCC அணி முதல் பரிசான 10 ஆயிரம் ரூபாயினை தட்டிஎன்றது.

இதில் KSCC ஆம்பலப்பட்டு அணி இரண்டாவது பரிசையும், 3வது பரிசை KSCC B அணியும், 4வது பரிசை ஆம்பலப்பட்டு அணியும், 5-வது பரிசை பாப்பநாடு அணியும் பெற்றது.

Close