இரும்புச்சத்து நிறைந்த டிரை ஃப்ரூட் – மில்க் ஷேக்

தேவையானவை: 

பேரீச்சம்பழம் – 10 
பால் – 2 கப் 
பாதாம் – 4 
முந்திரி – 4 
அக்ரூட் – 1 டேபிள் ஸ்பூன் 
தேன் – 1 டேபிள் ஸ்பூன் 



செய்முறை:
* கால் கப் கொதிக்கும் நீரில் பாதாமை ஐந்து நிமிடம் போட்டு எடுத்து, தோலை நீக்கிக் கொள்ளுங்கள். 

* பாலை நன்கு காய்ச்சி இறக்கிவிட்டு, சூடாக இருக்கும்போதே அதில் கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம், பாதாம், முந்திரி, அக்ரூட் ஆகியவற்றை ஊறவிடுங்கள். 

* நன்கு ஊறியதும் (பால் ஆறியதும்), தேன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அடித்து, குளிரவைத்துக் குழந்தைகள் கையில் கொடுங்கள். சுவைத்துப் பார்த்து குதூகலிப்பார்கள். 

*  இந்த மில்க் ஷேக்கில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு கூர்ந்து கவனிக்கும் திறனையும், புதிய விஷயங்களைக் கிரகிக்கும் திறனையும் இது அதிகப்படுத்துகிறது.
Close