அதிரை விளையாட்டு வீரர்களின் திறமைகள் வீணடிக்கப்படுகின்றதா…?

அதிரையில் கிரிக்கெட், கால்பந்து, கைப்பந்து, பேட்மிட்டன் தொடங்கி செஸ் தொடர்போட்டிகள் வரை நடத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று அதிரை காதிர் முஹைதீன், இமாம் ஷாபி பள்ளிகளில் மாணவர்கள் குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டுக்களிலும் அசத்தி வருகின்றனர்.

எனக்கு தெரிந்து நமதூரில் 15 விளையாட்டு அணிகளாவது சிறப்பாக விளையாடி வருகின்றன. பல திறமையான விளையாட்டு வீரர்கள் நமதூருக்கு கிடைத்தாலும் அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல் இல்லாத காரணத்தினால் உள்ளூர் விளையாட்டுகளுடனே அவர்களின் திறமை மூட்டை கட்டப்படுகின்றன.

எனவே அனைத்து விளையாட்டு அணிகளையும் ஒருங்கினைத்து தெரு பேதமின்றி ஒரு கூட்டமைப்பை நிறுவி அதன் மூலம் அவர்கள் விளையாட்டுத்துறையில் சாதிக்க முறையான பயிற்சியாளரை நியமிக்கலாம். அதன் மூலம் சிறப்பான வீரர்களாக அறியப்படும் இளைஞர்களை அடுத்த கட்டத்திற்கு பயணிக்க வைக்கலாம்.

விளையாட்டுத்துறையிலும் நல்ல எதிர்காலம் உள்ளது. எனவே நமதூர் இளைஞர்களின் அந்த திறமையை நன்கு பயன்படுத்திக்கொண்டால், நிச்சயம் ஒருநாள் நமதூரின் ஒரு இளைஞர் தேசிய அளவிலோ, சர்வதேச அளவிலோ சாதிப்பார். அப்படி அவர் சாதித்து நன்கு பொருள் ஈட்டும் பட்சத்தில் அதிரையின் வளர்ச்சிக்கு அவர்களின் பங்கு நிச்சயம் இருக்கும் என்பது எனது நம்பிக்கை…!

இன்ஷா அல்லாஹ், நமதூர் இளைஞர்களுக்கு அல்லாஹ் கொடுத்த திறமைகளை பயன்படுத்தி சாதிக்க வைக்க முயற்சிப்போம்.

-நூருல் இப்னு ஜஹபர் அலி

Close