அதிரையில் கோலாகளமாக தொடங்கிய AFFA கால்பந்தாட்ட தொடர்போட்டி (படங்கள் இணைப்பு)

அதிரையில் 14-வது ஆண்டாக AFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி இன்று மாலை கிராணி மைதானத்தில் கோலாகளமாக தொடங்கியது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் முன்னிலையில் ஊர் முக்கியஸ்தர்கள், விளையாட்டு வீரர்கள், AFFA நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திரண்டிருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த தொடரின் முதல் நாளான இன்று புதுக்கோட்டையை அணியை எதிர்த்து கோட்டையூர் அணி களமிறங்கியது. இதில் சிறப்பாக விளையாடிய புதுக்கோட்டை அணி அபார வெற்றி பெற்றது.

இந்த தொடரில் முதல் பரிசாக 25,000 ரூபாயும், இரண்டாவது பரிசாக 20,000 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Close