உள்ளூர்

அதிரை TIYA அமீரக கிளையின் பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் அறிவிப்பு!

அன்பிற்கினிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொரு வரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளராவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டாருக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். ஒருவரின் பணியாள் தன் எசமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே! உங்களில் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். நூல்: புஹாரி 7138.

வெள்ளிக்கிழமை மாலை 05.05.2017 மஃரிப் தொழுகைக்கு பிறகு TIYA வின் தலைவர் S.P.ஹாஜா முகைதீன் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் முஹல்லா வாசிகள் முன்னிலையில் கூட்டம் தொடங்கப்பட்டது. முன்னதாக சகோ.M.சகாபுதீன் கிராத் ஓதினார் அதனை தொடர்ந்து 2016 முதல் 2017 வரையிலான TIYA வின் செயல்பாடு, கணக்கு விபரங்கள் அனைத்தும் முஹல்லா வாசிகள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து அமீரக TIYA வின் செயலாளர் சகோ. M. சேக் நஸ்ருதீன் அவர்கள் 1.1.2016 அன்று முதல் 04.05.2017 வரை செய்த செயல்பாடுகள், மற்றும் இனி செய்ய இருக்கும் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். செய்த சேவைகள் அனைத்தையும் முஹல்லா வாசிகள் அனைவரின் பார்வைக்கு காபியெடுத்து வழங்கப்பட்டது.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு வரவு செலவு கணக்குகள் பொருளாலர் S. நவாஸ் அவர்களால் சமர்பிக்கப்பட்டது
மேலும் உறுப்பினர்கள் முன்னிலையில் தேர்தல் குழு அதிகாரியாக தேர்வு செய்யப்பட்ட சகோதரர் S.அன்சாரி மற்றும் M.அலிஅக்பர் அவர்கள் முன்னிலையில் TIYA வின் கடந்த வருட நிர்வாகம் கலைக்கப்பட்டு 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கான TIYA வின் புதிய நிர்வாகிகள் கீழ்க்காணும் சகோதரர்கள் ஏகோபித்த ஆதரவோடு ஒருமணதாக தேர்வு செய்தார்கள் அதன் விபரம் வருமாறு.

தலைவர் : K.M.N. முகமது மாலிக்
துணைதலைவர் : N.M.S.சேக்பரீது
செயலாளர் : S.M. சிராஜ்
துணைசெயலாளர் : B. அபுல் பரகத்
பொருளாளர் : S. மீரா முகைதீன்
துணைபொருளாளர் : H. ரியாஸ் அகமது

இணைசெயலாளர்கள் : . ஜவாஹிர் அகமது, K. பசிர் அகமது , M. ஹாஜி முகமது, , M.சலீம், J. சபீக் அகமது
மேற்கண்ட நிகழ்வுடன் அமீரக TIYAவின் பொதுக்குழு கூட்டம் துஆவுடன் இனிதே நிறைவுற்றது.

Show More

Related Articles

Close