அதிரை சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை..!

கோடை விடுமுறை தொடங்கிவிட்டது. கோடையை கொண்டாட மக்கள் நீர்நிலைகள் உள்ள தீம் பார்க் மற்றும் கடற்கரைகளுக்கு சென்று பொழுதை கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் செல்லக்கூடிய வாககனங்களின் நம்பகத்தன்மை மற்றும் ஓட்டுநரின் நம்பகத் தன்மையை ஒருமுறைக்கு இருமுறை ஆலோசித்து வாகனங்களை தேர்வு செய்யவும். ஒரு நொடிப்பொழுதில் எதுவும் நடக்கலாம் இதைத்தான் விபத்து என்கிறோம்.

மேலும் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் நிலை ஏற்பட்டால் மிகுந்த கவனம் தேவை. அல்லாஹ் நாம் அணைவரின் பாதுகாப்பிலும் நன்மையை நாடுவானாக. இந்த நிலையில் இன்று பாம்பன் பாலத்தின் தடுப்பு சுவற்றின் மீது டூரிஸ்டர் வேண் மோதி விபத்துக்குள்ளானது. சுற்றுலா சென்ற 14 பேர்களும் காயங்களின்றி உயிர் தப்பினர். இன்னும் சற்று நழுவி இருந்தால் வாகனம் கடலில் விழுந்து இருக்கும். எச்சரிக்கை…!

Close