அதிரையில் மின்மோட்டார்களை பறிமுதல் செய்யும் பேரூராட்சி – மக்களுக்கு உதவ புதிய குழு துவக்கம் (படங்கள் இணைப்பு)

அதிரையில் மின் மோட்டார்களை பயன்படுத்தி பொதுமக்கள் குடிநீர் எடுப்பதை தடுக்கும் விதமாக பேரூராட்சி சார்பாக மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசிப்பதற்காக நேற்று மாலை அதிரை காலவ்நிலையம் எதிரே உள்ள சமுதாய கூடத்தில் அனைத்து முஹல்லாவாசிகள் மற்றும் கிராம பஞ்சாயத்தார்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் முன்னாள் வார்டு கவுன்சிலர் அன்சர்கான், மரைக்கா இத்ரீஸ், குளோப்ஜான் அன்சாரி ஆகியோர் ஒருங்கினைப்பாளர்களாகவும் கீழ்காணும் 15 நபர்கள் பொருப்பாளர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் இது தொடர்பான பிரச்சனைகளை சந்தித்தால் தயங்காமல் கீழுள்ள எண்களுக்கு தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Close