அதிரை செக்கடிக்குளத்தில் தீயில் கருகிய புற்கள் (படங்கள் இணைப்பு)

அதிரை செக்கடிக்குளத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தூர்வாரப்பட்டு பெரும் பொருட்செலவில் நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டு, பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு தினசரி ஏராளமான மக்கள் இங்கு வந்து நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறை என்பதால் குழந்தைகளும் இங்குள்ள பூங்காவில் அதிகளவில் விளையாடி மகிழ்கின்றனர். இந்த நிலையில் செக்கடிக்குளத்தை சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள புற்கள் இன்று மதியம் தீயில் கருகின. இது தெரியாமல் நிகழ்ந்ததா அல்லது வேண்டிமென்றே நிகழ்த்தப்பட்டதா என்ற தெரியவில்லை. 

Close