அதிரை AFFA கால்பந்தாட்ட தொடர் லீக் போட்டியில் பட்டுக்கோட்டை அணி வெற்றி!

அதிரையில் 14-வது ஆண்டாக AFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த தொடரின் இன்றைய போட்டியில் அதிரை WFC அணியும், பட்டுகோட்டை அணியும் மோதினர். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டி சமநிலையில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து நடைபெற்ற டைபிரேக்கரில் அதிரை அணி 3-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. இதில் ஏராளமான பார்வையாளர்கள் முன்னிலையில் ஊர் முக்கியஸ்தர்கள், விளையாட்டு வீரர்கள், AFFA நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் திரண்டிருந்தனர்.

நாளை நடைபெறும் போட்டியில் அதிரை AFFA-B அணியை எதிர்த்து அதிரை AYFC அணி மோதவுள்ளது. இதில் பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Close