ஜெயிக்கப்போறது யாரு?

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில், கடந்த தேர்தல்களை விட இந்த முறை பல வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தி.மு.க காங்கிரஸ் கட்சியை விட்டு பிரிந்த காரணத்தினாலும், அ.தி.மு.க கம்யூனிஸ்டுகளை விட்டு பிரிந்த காரணத்தினாலும் இரண்டாக இருந்த வேட்பாளர்கள் நான்காக பிரிந்துள்ளனர்.

அது போல் புதிய கட்சியான ஆம் ஆத்மி என்னும் எளிய மக்கள் கட்சியும் மக்கள் ஆதரவுடன் தஞ்சை தொகுதியில் களம் இறங்குகிறது. பல வருடகாலமாக தஞ்சையை தன்னுடைய கோட்டையாக வைத்திருக்கும் தி.மு.க இந்த முறையும் இங்கு வெற்றிபெற வேண்டும் என்னும் தெம்பில் களம் இறங்குகிறது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியையும், 3 நகராட்சி தலைவர் பதவியையும், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவியையும், தஞ்சை எம்.எல்.ஏ. தொகுதியையும் அ.தி.மு.க. கைப்பற்றி உள்ளது. இதனால் எம்.பி. தொகுதியையும் இந்த முறை கைப்பற்றியாக வேண்டும் என்ற முனைப்புடன் அ.தி.மு.க.வினர் செயல்பட்டு வருகிறார்கள்.

இது விவசாயிகள் மற்றும் உழைப்பாளிகள் அதிகம் உள்ள தொகுதி என்பதால் கம்யூனிஸ்டுகளுக்கும் இங்கு ஆதரவு இருக்கவே செய்கின்றது. கூட்டனி இல்லை என்றாலும் எனவே விவசாயிகளின் ஆதரவுடன் இந்த தொகுதியைக் கைப்பற்றும் முனைப்புடன் அக்கட்சி உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு தி.மு.க வின் ஆதரவு இல்லை என்றாலும் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி வாக்குகள் சேகரித்து வருகிறது. கடந்த 2 நாடாளமன்ற தேர்தல்களிலும் வெற்றியைடைந்த இந்த கட்சி இம்முறையும் வேற்றியடைய வேண்டும் என்னும் குறிக்கோளுடன் களம் காண்கிறது.
பா.ஜ.க வை பொருத்தவரை தமிழகத்தில் பெரிய அளவில் ஆதரவு இல்லை என்றாலும் தே.மு.தி.க, ம.தி.மு.க, பா.ம.க போன்ற தமிழக கட்சிகளுடன் கூட்டனி அமைத்து தேர்தலில் களம் இறங்குகிறது.
இது போல் இன்னும் சில வேட்பாளர்கள் தஞ்சை தொகுதியில் போட்டியிட உள்ளதாக தேர்தல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
என்ன நேயர்களே, படிக்கும் போதே தலை சுற்றுகிறதா? 
எது எப்படியோ அனைத்து சின்னங்களுக்கும் வாக்கு இயந்திரத்தில் இடம் பத்துமா?

ஆக்கம்: அதிரை பிறை

Close