அதிரையில் +2 தேர்வில் மாணவிகளை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த மாணவர் இமாமுத்தீன்!

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று வெளியானது. இந்த தேர்வு முடிவுகள் அதிரை உட்பட தமிழகம் முழுவதும் மாணவிகளே முதலிடம் பிடித்து வருவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டு இதனை தகர்க்கும் வகையில் அதிரை அளவில் முதன் முதலாக மாணவிகளை பின்னுக்கு அதிரை காதிர் முஹைதீன் பள்ளியை சேர்ந்த மாணவர் இமாமுத்தீன் 1148 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். கீழத்தெருவை சேர்ந்த முஹைதீன் சாஹிப் அவர்களின் மகனாகிய இவர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Close