உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் காத்திட : (போலிகள் ஜாக்கிரதை)

இனி கோட் சூட் அணிந்து விளம்பரம் காட்டும் வெளியூர் பள்ளிகளில் சேர்த்து எந்த புண்ணியமும் இல்லை.

 

RANK பதில் கிரேடு முறையை அறிமுகம் செய்துள்ளது பள்ளி கல்வி துறை.

 

அதுமட்டுமின்றி பள்ளிகள் அதிக மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களை ஒரு விளம்பரத்தை போல Flex, TV, இணையம் போன்றவைகளில் மாணவர்கள் விளம்பரங்களாக காண்பித்து மக்களை ஏமாற்றி அதன் மூலம் புலப்பு நடத்தி வந்தனர் பள்ளி வியாபாரிகள்.

 

இதனை தடுக்க விளம்பரங்களுக்கு தடை விதித்துள்ளது பள்ளி கல்வி துறை.

 

இந்த நடவடிக்கையின் மூலம் விளம்பரங்கள் ஓரளவு குறைய வாய்புள்ளது. போலி விளம்பரங்களை கண்டு பல மாணவர்கள் படு குழியில் தள்ளப்பட்டு விட்டார்கள்.

 

பெரும்பாலான பள்ளிகள் 11ம் வகுப்பில் 12ம் வகுப்புக்கான பாடத்தினை துவங்கிவிடுகிறார்கள். அதனால் 11ம் வகுப்பு பாடங்கள் முறையாக கற்க வாய்ப்புகள் இல்லாமலே போய்விடுகிறது.

 

2 வருடம் படித்து 1100 எடுப்பதில் எந்த பலனும் கிடையாது.

 

புத்தகத்தை அப்படியே எழுதிய எடுக்கும் மதிப்பெண்ணை விட. மாணவன் திறமையால் புரிந்து சுயமாக எழுதி எடுக்கும் மதிப்பெண் குறைவாக இருந்தாலும் அதில் பலன் அதிகம் இருக்கிறது.

 

அது மட்டுமே அறிவை வளர்க்கும்.

 

இனியும் போலிகளை கண்டு ஏமரா வேண்டாம்.!

 

Adirai Salih

 

Close