அதிரையை நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை!

அதிரை கடந்த பல நாட்களாக கத்திரி வெயில் வாட்டி வந்துக்கொண்டிருந்த நிலையில் இன்று அதிகாலை சுமார் 2:30 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை விடாமல் சுமார் 5:20 மணி வரை சரியான இடி, மின்னல்களோடு முடிவுக்கு வந்தது. சுமார் இரண்டேமுக்கால் மணி நேரம் தொடர்ந்து பெய்து அதிரையை வெளுத்து வாங்கியதால் தற்போது குளிர்ச்சியான சூழல் நிலவிவருகிறது. வெயிலில் வாடிய அதிரை மக்களுக்கு இந்த கனமழையால் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மகிழ்ச்சியில் இருந்த அதிரை மக்களுக்கு தற்போது மின் தடைபட்டு நிலவிவருவதால், மின் இணைப்பு வருமா, வரதா என கொலப்பத்தில் இருக்கின்றனர்.

 

Close