அதிரை அருகே கார் கவிழ்ந்து பயங்கர விபத்து! (படங்கள் இணைப்பு)

முத்துப்பேட்டையை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணியளவில் இவர்கள் அதிரையை அடுத்துள்ள தம்பிக்கோட்டையில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் சென்றுகொண்டிருக்கும் எதிரே வேகமாக லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. இதனால் அந்த லாரியின் மீது மோதாமல் இருக்க இவர்கள் காரை வேகமாக திருப்பியுள்ளனர். இதில் கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இருவரும் காயங்களுடன் உயர்தப்பினர். அவர்கள் தற்போது தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்துக்குள்ளான காரின் முன்பகுதி முற்றிலுமாக சேதமடைந்தது.

இந்த விபத்து குறித்து அதிரை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Close