சபியுல்லாஹ் மௌலானா சிறப்புரையுடன் நடைபெற்ற அதிரை கடற்கரை தெரு அமீரக அமைப்பின் ஆலோசனைக் கூட்ட (படங்கள் இணைப்பு)

அஸ்ஸலாமு அலைக்கும்,

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் சிறப்பு கூட்டம் (12-05-2017) வெள்ளி கிழமை மக்ரிப் தொழுகைக்கு பிறகு சரியாக 07:00 மணியளவில் மாஷா அல்லாஹ் மிக சிறப்பான முறையில் தேரா தமிழ் பஜார் கோட்டை பள்ளிக்கு அருக உள்ள பஞ்சாப் தர்பார் ரெஸ்டாரண்ட் மாடியில் அறை எண் 303ல் (மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை ரூம்) நடைபெற்றது.

கூட்டத்தை சகோதரர் தமீம் அன்சாரி அவர்கள் கிராத் ஓதி துவங்கி வைத்தார்கள் அமீரக அம்மைப்பின் துணை தலைவர் M.அகமது அன்சாரி அவர்கள் கூட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரவேற்புரை நிகழ்த்தினார்கள், அமீரக அமைப்பின் தலைவர் SMA.ஷாஹுல் ஹமீது அவர்கள் தலைமையேற்று தலைமை உரை நிகழ்த்தினார்கள், செயற்குழு உறுப்பினர் AH.அப்துல் மாலிக் அவர்கள் அமீரகத்தில் இருக்கும் கடற்கரை தெரு முஹல்லாவாசிகளின் ஒற்றுமையை வலியுறுத்தி சிற்றுரை வழங்கினார்கள்.
நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் தாயகத்திலிருந்து வருகை தந்த கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளியின்தலைமை இமாம் மௌலானா ஹாபிழ் MG.சபியுல்லாஹ் அன்வாரி ஹஜ்ரத் அவர்கள் அமீரக வாழ் மக்களின் பொறுப்பு என்ற தலைப்பில் பயனுள்ள வகையில் மிக சிறப்பான முறையில் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்

கூட்டத்திற்கு ஏராளமான கடற்கரை தெரு முஹல்லா வாசிகள் வருகை தந்து கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

இறுதியாக அமீரக அம்மைப்பின் செயலாளர் சகோதர M.ஜாஹிர் ஹுசைன் அவர்கள் கூட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த கடற்கரை தெரு முஹல்லா வாசிகள் அனைவருக்கும் நன்றியுரை வழங்கினார்

மேலும் குறிப்பாக கூட்டம் நடத்துவதற்கு இடம் உதவி கோரிய போது உடனே இடம் தந்து உதவிய மதுக்கூர் தவ்ஹித் தர்ம அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கும் கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறோம்.

மாஷா அல்லாஹ் ஜஸாக்கல்லாஹ் கைரன் Fபித்தாரைன்

இப்படிக்கு

கடற்கரைத்தெரு அமீரக அமைப்பு

Close