அதிரையில் ஜாதி, மத, தெரு பேதமின்றி “அதிரை சமூக நலக்கூட்டியக்கம்” தொடக்கம்!

அதிரையில் தற்போது குடிநீர் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகள் தலைதூக்கியுள்ளன. ஆனால், பேரூராட்சி தலைவர், வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பொறுப்புதாரிகள் இல்லாததன் காரணமாகவும், நிரந்தர செயல் அலுவலர் பணியில் அமர்த்தப்படாததாலும் மக்களால் பொதுப்பிரச்சனைக்கு புகார் அளிக்க முடியவில்லை. எனவே அதிரையில் மக்களின் பிரச்சனைகளை குறைகளை, தேவைகளை ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகள் முன் நிறுத்தி தீர்வு பெற்றுத்தரும் நோக்கில் ஜாதி, மத,தெரு பாகுபாடின்றி அதிரைக்கு உட்பட்ட அனைத்து ஜமாத் மற்றும் பஞ்சாயத்தை சேர்ந்த முக்கிய நபர்களை ஒருங்கினைத்து “அதிரை சமூக நல கூட்டியக்கம்” என்ற பெயரில் தொண்டு அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.

இதன் முதல் பணியாக தற்போது அதிரையில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டுக்கு ஏதுவாக பொதுமக்கள் மத்தியில் குடிநீரை சிக்கனமாக செலவழிப்பது குறித்து ஆட்டோ விளம்பரம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.

Close