அதிரை, பட்டுக்கோட்டை பள்ளி வாகனங்கள் ஆய்வு!

Want create site? Find Free WordPress Themes and plugins.

பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இன்று காலை முதல் பள்ளி வாகனங்களை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநில போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பெயரில் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன் உத்தரவின் பெயரில் பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கதிர்வேல் பரிந்துரையின் பெயரில் பட்டுக்கோட்டை, அதிராம்பட்டிணம், பேராவூரணி, மதுக்கூர் உள்ளிட்ட பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் வரும் ஊர்களில் செயல்படும் பள்ளி வாகனங்கள் இன்றைய தர ஆய்வில் கலந்துகொண்டன. சிறப்பு அழைப்பாளராக பட்டுக்கோட்டை ஏ.எஸ்.பி அரவிந்த்மேணன் கலந்துகொண்டார்.

இந்த பகுதியில் செயல்படும் பள்ளிகளில் மொத்தம் 280 வாகனங்கள் உள்ளன. அதில் இன்று 170 வாகனங்கள் ஆய்வில் கலந்துகொண்டன. ஆய்வின் முடிவில் பெரிய வகையிலான குறைகள் இருக்கும் வாகனங்களின் தகுதி சான்றிதழ்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. சிறிய வகையிலான குறைகளுக்கு அபராதம் விதித்து சரிசெய்துவர சொல்லி உத்தரவிடப்பட்டது. மேலும் கலந்துகொள்ளாத வாகனங்கள் பழுது பார்க்கும் பணிக்காக வாகன பட்டறைகளில் வேலைக்க விடப்பட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் எதிர்வரும் 31.5.17 தேதிக்குள்ளாக வாகன பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும் என கூறப்பட்டது. இதுவரை நடைபெற்ற வாகன சோதனையில் பாதுகாப்பின்மை, அவசரவழி கதவினை திறக்க முடியாதது போன்ற காரணங்களால மூன்று வாகனங்களுக்கு தரச்சான்றிழ் தற்காளிகமாக நிறுத்திவைக்கப்பட்து.

பள்ளிக்குழந்தைகளை ஏற்றிசெல்லம் வாகன்ஙகள் என்பதால் வாகன ஆய்வு கடுமையாக பின்ப்பற்றப்படுவதாக வாகன ஓட்டிகள் கூறினர். ஆய்வில் கலந்துகொண்டவர்களுக்கு இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட ஏ.எஸ்.பி அரவிந்த்மேணன் பேசியதாவது. பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு என சில சமூக கடமைகள் இருக்கிறது. உதராணமாக நீங்கள் சிகப்பு விளக்கு எரியும் போதோ, போக்குவரத்து காவலர் தடுக்கும் போதோ, செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டி விதிகளை மீறி செயல்படுவது போன்ற செயல்களை நீங்கள் செய்யும் போது, உங்கள் வாகனத்தில். உள்ள குழந்தைகள் எதிர்காலத்தில் நீங்கள் செய்யும் தவறினை , சரி என நிணைத்து தவறாக செயல்பட வாய்ப்பிருக்கிறது.

போக்குவரத்து விதிகளை பயிற்றுவிக்கும் ஒரு மகத்தான சமூகபணி உங்கள் முன் இருக்கிறது என்பதை நீங்கள் அணைவரும் நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வாகனத்தில் உங்களுடன் பயணிக்கும் குழந்தைகள் உங்களிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்வார்கள். ஆக தங்கள் அனைவரின் செயல்பாடும் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எதிர்கால ஒரு சமூகம் உங்களை பின்பற்றுகிறது என்பதை அறிந்து செயல்படுங்கள் என பேசினார்.

நன்றி: நிருபர் பட்டுக்கோட்டை ராஜா

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author