+2 மாணவர்கள் இன்றுமுதல் மதிப்பெண் சான்றிதலை இணையதளத்தில் DOWNLOAD செய்துகொள்ளலாம்!

Want create site? Find Free WordPress Themes and plugins.

பிளஸ் 2 மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் இருந்து இன்று (திங்கள்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ள லாம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன. மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 15 முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, பள்ளி மாணவர்களும், தனித்தேர்வர்களும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று (திங்கள்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) தங்கள் பதிவெண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்கள் படித்த, தேர்வெழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலம் 17-ம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம்.

வழக்கமாக மதிப் பெண் சான்றிதழில் மாண வரின் பெயர் ஆங்கிலத் தில் மட்டுமே குறிப்பிடப் பட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு ஆங்கி லத்தில் மட்டுமின்றி தமி ழிலும் இடம்பெற்றிருக் கும் என்பது குறிப்பிடத் தக்கது. விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்றைக்குள் (திங்கள் கிழமை) விண்ணப்பிக்க வேண்டும்.

DOWNLOAD செய்ய வேண்டிய இணைய முகவரி: http://www.dge.tn.nic.in/

 

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author