பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து அடித்து உடைப்பு!

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13–வது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை போக்குவரத்து தொழிலாளர்கள் வற்புறுத்தி வந்தனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போக்குவரத்து தொழிலாளர்கள் அறிவித்து இருந்தனர்.

எனவே இந்த போராட்டத்தை தடுத்து நிறுத்தும் நோக்கத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் தமிழக அரசு சார்பில் ஏற்கனவே 4 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வேலை நிறுத்தம் தொடங்கியது. தமிழகம் மற்றும் சென்னையின் புறநகர் பகுதிகளிலும் பேருந்து இல்லாமல் மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்

அதிரை,பட்டுக்கோட்டை, தஞ்சையிலும் தனியார் பேருந்துகளும் ஒரு சில அரசுப்பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்தின் கண்ணாடிகளை மர்ம நபர்கள் அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Close