உலகத்தமிழ் சங்கம் நடத்தும் தமிழ் நிலாக் கவியரங்கத்தில் கவிபாடும் அதிரை கவியன்பன் கலாம்!

அதிரை தட்டாரத் தெருவை சேர்ந்தவர் “கவியன்பன்” கலாம். கவிதை ஆக்கத்தில் வல்லவராக திகழும் இவர் பல்வேறு தலைப்புகளில் இனிமையான கவிதைகளை எழுதி வருகிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக இவரது கவிப்பயணம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. நாளிதழ்கள், வாணொளிகளை கடந்து இன்றைய காலத்து அதிரை இணையதளங்களிலும், முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் இவரது கவிதைகள் ஒலித்துக்கொண்டிருகின்றன.

பல விதமான பட்டங்களையும், விருதுகளையும் தனது கவிதைகளின் மூலமாக பெற்ற இவருக்கு மேலும் ஒரு கவுரவம் சேர்க்கும் விதமாக மதுரை உலகத்தமிழ் சங்கம் மற்றும்சங்கத்தமிழ் கவிதைகள் பூங்கா முகநூல் குழுமம் இணைந்து நடத்தும் தமிழ் நிலாக் கவியரங்கத்தில் இவர் கவிபாட உள்ளார். இவருக்கு அதிரை பிறையின் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.

Close