அதிரையில் எழுச்சியுடன் நடைபெற்ற ப்ளாஸ்டிக் விழிப்புணர்வு பைக் பேரணி (படங்கள் இணைப்பு)

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சுற்றுச்சூழல் மன்றம் 90.4அமைப்பின் சார்பாக பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த அமைப்பின் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகிறது.இதன் ஒரு கட்டமாக இந்த அமைப்பின் மூலம் ஒரு குழு அமைக்கப்பட்டு அதிராம்பட்டினம் பேரூராட்சியில் 21 வது வார்டுக்குட்பட்ட பகுதியான சிஎம்பி லைனில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று அங்குள்ள குப்பைக்கழிவுகளை இக்குழுவினர்கள்மூலம் அகற்றப்பட்டுவந்தது.மேலும் இதேபோல அதிராம்பட்டினம் பகுதிக்குட்பட்ட அனைத்து வீடுகளுக்கும் சென்று தூய்மைப்பணியை மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த அமைப்பின் மற்றொரு நடவடிக்கையாக பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது.முன்னதாக பேரணி அதிராம்பட்டினம் பஸ் ஸ்டாண்டிலிருந்து துவங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு மன்ற தலைவர் விவேகானந்தன் தலைமைதாங்கினார். சகாபுதீன், சேக்நசுருதீன்,அகமதுஹாஜா ஆகியோர் முன்னிலைவகித்தனர். மன்ற செயலாளர் முகமது சலீம் வரவேற்றார். கௌரவ தலைவர் தாஜீதீன் பேரணியை கொடி அசைத்து துவக்கிவைத்தார்.

பேராசிரியர் செய்யது அகமதுகபீர் மற்றும் அதிராம்பட்டினம் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரவிசங்கர் ஆகியோர் பிளாஸ்டிக் கழிவுகளின் தீமைகள் பற்றி விளக்கிப்பேசினர். பேரணியில் லயன்ஸ், ரோட்டரி, இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தினர்கள் மற்றும் கிரசன்ட் ப்ளட் டோனர் அமைப்பினர்,எப்எம் 90.4 உறுப்பினர்கள் என 200க்கும் மேற்பட்டோர் 100க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களின் மூலமாக ஊர்வலமாக சென்று அதிராம்பட்டினத்தில் அத்தனை வார்டுகளுக்கும் நேரடியாக துண்டு பிரசுரத்தை வழங்கினர்.பின்னர் பேரணி துவக்க இடத்துக்கே மீண்டும் வந்து சேர்ந்து பேரணி நிறைவடைந்தது.இதில் சுற்றுச்சூழல் மன்ற 90.4 துணைதலைவர் முகமது இப்ராஹிம்,துணைசெயலாளர் மரைக்காஇத்ரிஸ்அகமது உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.முடிவில் மன்ற பொருளாளர் முத்துக்குமரன் நன்றி கூறினார்.

Close