அரையிறுதிக்கு முன்னேறியது அதிரை AFFA!

அதிரையில் 14-வது ஆண்டாக AFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கி  கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த தொடர் தற்பொழுது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அதிரை AFFA அணியும் பட்டுக்கோட்டை அணியும் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அதிரை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

அவர்களிடம் இருந்த பந்தை கைப்பற்ற எதிரணியினர் கடுமையாக போராடினர். இறுதியாக AFFA அணி 2-0 பூஜியம் என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

நாளை நடைபெறும் அரையிறுதிப்போட்டியில் அதிரை AFFA அணியை எதிர்த்து சிவகங்கை அணி களம் காண உள்ளது. இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

 

Close