அசத்தல் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது AFFA! (படங்கள் இணைப்பு)

அதிரையில் 14-வது ஆண்டாக AFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கி கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த தொடர் தற்பொழுது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் அதிரை AFFA அணியும் சிவகங்கை அணியும் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அதிரை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

சமபலம் பொருந்திய இரு அணிகள் விளையாடிய இந்த போட்டி பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. பரபரப்பான இப்போட்டியில் AFFA அணி  1-0 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது. அதிரை AFFA அணி வீரர் மூபீஸ் அசத்தலான ஒரு கோலை விளாசி வெற்றிக்கு வித்திட்டார்.

Close