முத்துப்பேட்டை அருகே நடைபெற்ற கைப்பந்து தொடரை கைப்பற்றி அசத்திய அதிரை அணி! (படங்கள் இணைப்பு)

முத்துப்பேட்டையை அடுத்துள்ள ஜாம்பனோட்டையில் ஜாம்பை பாய்ஸ் கைப்பந்து கழகம் சார்பாக முதலாம் ஆண்டாக கைப்பந்து தொடர்போட்டி நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அதிரை ப்ரண்ட்ஸ் அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேறினர்.

அதில் தன்னை எதிர்த்து விளையாடிய நாட்டுச்சாலை அணியினரை 25-23, 23-25, 25-24 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு அதிரை அணி முன்னேறியது. இதையடுத்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஜாம்பவானோடை அணியினரை 25-21, 25-23 என்ற செட் கணக்கில் அதிரை ப்ரண்ட்ஸ் அணி வீழ்த்தி முதல்பரிசான ரூ.8000 ஐ கைப்பற்றியது.

Close