அசத்தல் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றிய அதிரை சிட்னி கிரிக்கெட் அணியினர் (படங்கள் இணைப்பு)

அதிரை சிட்னி கிரிக்கெட் அணியின் சார்பாக 10 ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி சிட்னி மைதானத்தில் கடந்த 4 நாட்களாக நடைபெற்றது. இதில் அதிரை மற்றும் பல ஊர்களை சேர்ந்த சிறப்பான வீரர்கள் கலந்துகொண்டு விளையாடினர். இதன் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் இன்றுடன் நடைபெற்று முடிந்தன. இதில் அரையிறுதியில் முத்துப்பேட்டை No Fear அணியை வீழ்த்திய அதிரை AFCC அணி இறுதிப்போட்டியில் சிட்னி அணியை எதிர்த்து களமிறங்கியது.

இதில் டாஸ் வென்று பேட் செய்த AFCC அணி 8 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்களை குழித்தது. இதையடுத்து களமிறங்கிய சிட்னி அணி போராடி இலக்கை கடந்து அபார வெற்றி பெற்று முதல்பரிசை தட்டிசென்றது. இந்த போட்டியில் சிட்னி அணி வீரர் பிலால் சிறப்பான முறையில் பந்துவீசி ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முதல் பரிசு: அதிரை சிட்னி -ரூ.10,000

இரண்டாம் பரிசு: அதிரை AFCC – ரூ.8,000

மூன்றாம் பரிசு: முத்துப்பேட்டை NO FEAR- ரூ.6,000

நான்காம் பரிசு: அதிரை சிட்னி(B) – ரூ.4,000

Close