ஒரே நாளில் இரண்டு இறுதிப்போட்டிகளை சந்திக்க இருக்கும் அதிரை AFFA அணி (படங்கள் இணைப்பு)

அதிரையில் 14-வது ஆண்டாக AFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கி கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த தொடர் தற்பொழுது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் பள்ளத்தூர் அணியும் கண்டனூர் அணியும் மோதின. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் தென்னரசு பள்ளத்தூர் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர்.

சமபலம் பொருந்திய இரு அணிகள் விளையாடிய இந்த போட்டி பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. பரபரப்பான இப்போட்டியில் பள்ளத்தூர் அணி 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது. நாளை நடைபெறும் இறுதிப்போட்டையில் அதிரை AFFA அணியை பள்ளத்தூர் எதிர்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதே போன்று கூத்தாநல்லூரில் நடைபெற்ற மாபெரும் கால்பந்தாட்ட தொடரின் அரையிறுதிப்போட்டியில் AFFA அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் கூத்தாநல்லூரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. எனவே நாளைய தினம் AFFA A அணி  அதிரையிலும் AFFA B அணி கூத்தாநல்லூரிலும் இறுதிப்போட்டிகளில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Close