அதிரை தக்வா பள்ளியில் ரமலானை முன்னிட்டு சஹர் உணவு ஏற்பாடு!

அதிரை தக்வா பள்ளியில் ஆண்டுதோறும் ரமலான் மாதம் முழுவதும் இலவச சஹர் விருந்து நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ஆண்டு ரமலான் மாதத்திலும் இந்த விருந்தில் ஏராளமான வெளியூர் வாழ் மக்கள், ஏழைகள் என பலர் கலந்துக்கொண்ட பயனடைந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் இந்த சஹர் விருந்தை நடத்த நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். இதில், ஆதரவற்றோர், வெளியூர்களில் இருந்து அதிரையில் பணி நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், மாணவர்கள் பயனடையலாம். அவர்கள் பள்ளி நிர்வாகத்தினரிடம் சென்று இது குறித்து முன்பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Close