அதிரை AFFA கால்பந்து அணி நிர்வாகத்தினரின் முக்கிய அறிவிப்பு!

அதிரையில் 14-வது ஆண்டாக AFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கி கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த தொடர் தற்பொழுது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி AFFA மற்றும் பள்ளத்தூர் அணிகளுக்கிடையே இன்று நடைபெறுவதாக இருந்தது.

இந்த நிலையில் இன்று கூத்தாநல்லூரில் நடைபெறும் முக்கியமான கால்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டியில் இன்று AFFA அணி விளையாட இருப்பதால் AFFA தொடரின் இறுதிப்போட்டி நாளை ஒத்திவைக்கப்படுவதாக AFFA அறிவித்துள்ளது.

Close