எதிரணியினரின் மோசடியால் கூத்தாநல்லூர் இறுதிப்போட்டியில் பாதியுடன் வெளியேறிய அதிரை AFFA அணியினர்!

பலத்த எதிர்பார்ப்புகளுக்கிடையே கூத்தாநல்லூரில் மாரடோனா கால்பந்து கழகம் நடத்திய கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இன்று அதிரை AFFA அணி கலந்துகொண்டது. இந்த போட்டியை காண அதிரை கால்பந்தாட்ட ரசிகர்கள் 300-க்கும் அதிகமானோர் கூத்தாநல்லூருக்கு வருகை தந்திருந்தனர். அப்போது போட்டியின் 11-வது நிமிடத்தில் எதிரணியினர் ஆப்-சைட் கோல் ஒன்றை அடித்தனர். லைன் நடுவர் ஆஃப் சைடு காட்டியும் மெயின் நடுவர் ஆப் சைடு வழங்காததால் எதிரணிக்கு கோல் வழங்கப்பட்டது.

இதனால் AFFA வீரர்கள் நடுவரிடம் முறையிட்டதை அடுத்து போட்டி ஒருங்கினைப்பாளர்கள் கோலை ரத்து செய்ய முடிவெடுத்தனர். இதற்கு எதிரணியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் டாஸ் முறையில் கோலை வழங்குவதா வேண்டாமா? என நிர்ணயம் செய்யலாம் என போட்டி குழுவினர் பரிந்துரைத்தனர். இதனை ஏற்க மறுத்த AFFA அணியினர் டை பிரேக்கர் முறையில் வெற்றி தோல்வியை தீர்மாணிக்குமாறு வலியுறுத்தினர். ஆனால், அந்த ஒரு கோலை தங்களுக்கு வழங்குமாறு எதிரணியினர் தகராறு செய்தனர். போட்டி ஏற்பாட்டாளர்களும் இதனை சரியாக கையாளாததன் காரணமாக ஆத்திரமடைந்த அதிரை AFFA அணியினர், அதிரை ரசிகர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினரின் ஆலோசனைக்கு இணங்க தங்களுக்கு கிடைக்க வேண்டிய பரிசுகளை உதறித்தள்ளிவிட்டு, தொடரை விட்டு வெளியேறினர்.

Close