ரசிகர்கள்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அதிரை AFFA அணி சாம்பியன் கோப்பையை வென்றது (படங்கள் இணைப்பு)

அதிரையில் 14-வது ஆண்டாக AFFA நடத்தும் கால்பந்தாட்ட தொடர் போட்டி கடந்த 5ஆம் தேதி முதல் தொடங்கி கிராணி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்ட இந்த தொடர் இறுதிப்போட்டியுடன் இன்று நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் அதிரை AFFA அணியை எதிர்த்து பள்ளத்தூர் அணி களமிறங்கியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல் பகுதி நேர ஆட்டத்தில் சமபலம் பொருந்திய இரு அணிகளுக்கு கோல் ஏதும் அடிக்கவில்லை. இதையடுத்து இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தின் துவக்கத்தில் பள்ளத்தூர் அணி ஒரு கோலை விளாசியது. ஆனால் அதை தொடர்ந்து AFFA அணி போட்டியை சமன் செய்ய பலமாக போராடியது. இந்த நிலையில் ஆட்டத்தின் கடைசி 3 நிமிடத்தில் AFFA அணி அபாரமாக ஒரு கோலை அடிக்க போட்டி சமநிலையில் முடிந்தது.

இதையடுத்து வெற்றியாளரை நிர்ணயம் செய்ய கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. இதில் AFFA அணியின் இளம் நட்சத்திர வீரர் ஆசிப் தனக்கு கிடைத்த வாய்ப்பை அற்புதமான கோலாக மாற்றினார். இதையடுத்து 2-1 என்ற கோல்கணக்கில் பல ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் AFFA அணி வெற்றிக்கொடியை நாட்டியது.

சிறப்பு பரிசுகள்:

சிறந்த கோல் கீப்பர்: விக்கி (பள்ளத்தூர்)

சிறந்த Left defence: சலாஹுத்தீன் (AFFA)

சிறந்த Right defence: முபீஸ் (AFFA)

சிறந்த Left forward: ஆசிப் (AFFA)

சிறந்த Center forward: மாயா (பள்ளத்தூர்)

தொடர்நாயகன் விருது: சலாஹுத்தீன் (AFFA)

சிறந்த கோல்களை விளாசிய வீரர்: சபானுத்தீன் (AFFA)

வளரும் இளம் வீரருக்கான விருது: சைபுத்தீன் (AYFC)

 

Close