அதிரையில் ADT நடத்தும் ரமலான் சிறப்பு பயான் நிகழ்ச்சிகள்!

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதம் முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரமலான் மாதம் முழுவதும் ஆண்களுக்கு நடுத்தெரு EPMS பள்ளி எதிரில் சிறப்பி பயான் நிகழ்ச்சி இரவு 10 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் பெண்கள் கலந்துகொள்ளும் வகையில் தனி இடவசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பிலால் நகரில் உள்ள இஸ்லாமிய பயிற்சி மையத்தில் காலை 11 மணியளவில் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதில் பிறை 1 முதல் 20 வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் மௌலவி ஹுசைன் மன்பயீ கலந்துகொண்டு மார்க்க உரையாற்ற உள்ளார்.

Close