இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை! இஸ்லாமியர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு!

மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் இன்று புதிய அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு முழுவதும் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வது உடனடியாக தடை செய்யப்படுகிறது. இனிமேல், சந்தைகளில் விவசாய தேவைகளுக்காக மட்டுமே மாடுகளை விற்பனை செய்யவோ, வாங்கவோ முடியும்.

இனி கசாப்பு தொழிலுக்காகவோ, இறைச்சி தேவைக்காக யாரும் பசு, ஒட்டகம், காளை, எருமை மாடு உள்ளிட்ட விலங்குகளை வாங்கவோ, விற்கவோ முடியாது. தற்பொழுதுஅமல்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறை மூலம், நாடு முழுவதும் உள்ள மாட்டிறைச்சி விற்பனை கூடங்கள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாடு விற்பனையாளர்கள் மற்றும் பீப் பிரியாணி மற்றும் மாட்டு இறைச்சி மூலம் தொழில் நடத்தும் லட்சக்கணக்கான மக்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வரும் மத்திய அரசு அதற்கு முதலில் கைவைத்திருக்கும் ஆயுதம் தான் மாட்டிறைச்சி.

Close