தமிழகத்தில் மே-28 ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு – தலைமை காஜி அறிவிப்பு

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானில் அவர்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து, இறுதியில் ஈகைத் திருநாளினினை கொண்டாடுவது வழக்கம்.அதற்கான நோன்புக் காலம் துவங்குவது பற்றிய அறிவிப்பு, முறையாக அரசு தலைமை ஹாஜி அவர்களால் வெளியிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப், தமிழகத்தில் மே 28-ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு காலம் துவங்குவதாக அறிவித்துள்ளார்.

Close