அதிரை ABCC நடத்திய மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியில் RCCC அணி கோப்பையை வென்றது (படங்கள் இணைப்பு)

அதிரை ABCC அணியினர் நடத்திய 20ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த சில நாட்களாக கடற்கரைத் தெரு மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதில் அதிரை உட்பட பல ஊர்களை சேர்ந்த தலைசிறந்த அணிகள் கலந்துகொண்டு விளையாடின. இந்த நிலையில் இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று மாலை நடைபெற்றது. இதில் அதிரை ABCC, RCCC ஆகிய அணிகள் மோதின. இதில் RCCC அணி சிறப்பாக விளையாடி வெற்றி கோப்பையை கைப்பற்றியது. இரண்டாம் பரிசை அதிரை ABCC வென்றது.

Close