அதிரையில் துவங்கிய ADT யின் ரமலான் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதம் முழுவதும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு பயான் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ரமலான் மாதம் முழுவதும் ஆண்களுக்கு நடுத்தெரு EPMS பள்ளி எதிரில் சிறப்பு பயான் நிகழ்ச்சி இன்று இரவு 10:15 மணியளவில் துவங்கியது. இதில் மௌலவி ஹுசைன் மன்பயீ கலந்துகொண்டு மார்க்க உரையாற்றினார். முதல் நாளான இன்று திருக்குர்ஆனின் மகத்துவங்கள் குறித்தும், அதனை ஓதுவதன் முக்கியத்துவங்களையும் விளக்கினார்.

இந்த நிகழ்ச்சி அடுத்த 20 நாட்களுக்கு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Close