டெல்லியில் பிறந்து சில நிமிடங்களில் நடக்க பழகிய குழந்தை!

பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கழித்துதான் தவழ ஆரம்பிக்கும். பின்பு கொஞ்ச நாட்களுக்கு பிறகு உட்காரத்தொடங்கி, பின்புதான் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும். ஆனால் டெல்லியில் பிறந்த குழந்தை ஒன்று பிறந்து சில மணிநேரங்களிலேயே நர்ஸ்ஸின் உதவியுடன் நடக்கப்பழகியுள்ளது. நர்ஸ் ஒருவர் தன்னுடைய கைகளில் குழந்தையை தாங்கி பிடிக்க, தன்னுடைய பிஞ்சு கால்களால் அக்குழந்தை நடக்க பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக வருகின்றது.

Close