அதிரை கரையூர் தெருவில் கேஸ் வெடித்ததில் 35 க்கும் அதிகமான வீடுகள் எரிந்து நாசம் (படங்கள் இணைப்பு)

அதிரை கரையூர்ப்தெருவில் உள்ள ஒரு வீட்டில் எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்தது. கேஸ் வெடித்த விபத்தில் கொழுந்துவிட்டெரிந்த தீ பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் அருகில் இருந்த 35-க்கும் அதிகமான வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. அதிரையில் தீயனைப்பு நிலையம் இல்லாத காரணத்தால் தீயை உடனுக்குடன் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதில் வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமாகின. இந்த விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் முழுமையாக கணக்கிடப்படவில்லை. இருப்பினும் லட்சக்கணக்கில் பொருளிழப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

Close