அதிரையில் தீவிபத்து நிகழ்ந்த இடத்தில் MLA சி.வி.சேகர் நேரில் ஆய்வு! (படங்கள் இணைப்பு)

Want create site? Find Free WordPress Themes and plugins.

அதிரை கரையூர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் எதிர்பாராத விதமாக கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்தது. கேஸ் வெடித்த விபத்தில் கொழுந்துவிட்டெரிந்த தீ பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்த வீடுகளுக்கும் பரவியது. இந்த விபத்தில் அருகில் இருந்த 35-க்கும் அதிகமான வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின. அதிரையில் தீயனைப்பு நிலையம் இல்லாத காரணத்தால் தீயை உடனுக்குடன் அமைப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதில் வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமாகின. இந்த விபத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் முழுமையாக கணக்கிடப்படவில்லை. இருப்பினும் லட்சக்கணக்கில் பொருளிழப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் விபத்து நடைபெற்ற இடத்தில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி.சேகர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

You might also like More from author