மாட்டுக்கறிக்கு தடை விதித்த பா.ஜ.க அரசை கண்டித்து அதிரையில் SDPI நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம்!

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை என்ற மத்திய அரசின் அறிவிப்பு சிறுபாண்மை மக்களை மட்டுமின்றி நாடு முழுவதும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை திராவிட நாடாக அறிவிக்க வேண்டும் என்ற அளவிற்கு இந்த அறிவிப்பு மக்களை கொதிப்படைய செய்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் மத்திய பா.ஜ.க அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில் அதிரையில் SDPI கட்சி சார்பாக பேருந்து நிலையில் மாட்டிறைச்சி தடையை கண்டித்து போராட்டம் நடத்தப்படவுள்ளது.

வருகிற மே 31 ஆம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெறும் இந்த போராட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Close