அதிரையில் சூடு பிடிக்கும் பீப் (கபாப்) விற்பனை (படங்கள் இணைப்பு)

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்ய தடை என்ற மத்திய அரசின் அறிவிப்பு சிறுபாண்மை மக்களை மட்டுமின்றி நாடு முழுவதும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களை திராவிட நாடாக அறிவிக்க வேண்டும் என்ற அளவிற்கு இந்த அறிவிப்பு மக்களை கொதிப்படைய செய்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் கட்சிகள் மத்திய பா.ஜ.க அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர்.

இந்த பரபரப்புகளுக்கிடையே அதிரையில் பீப் (கபாப்) விற்பனை சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஏராளமானோர் இஃப்தாருக்கு பிறகு பீப் வாங்கி சுவைக்கின்றனர். மத்திய அரசின் மாட்டிறைச்சி தடையால் முன்பை விட பீப் விறபனை அதிகரித்து இருப்பதாக கடைகாரர்கள் தெரிவித்துள்ளனர்.

Close