பட்டுக்கோட்டையில் மாட்டிறைச்சி கஞ்சி குடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக வினர்! (படங்கள் இணைப்பு)

மாட்டுக்கறி உன்பதை தடை செய்து இந்திய முஸ்லிம்களை பழிவாங்க துடிக்கும் மத்திய பாசிச பாஜக வின் முயற்சிகளை உடைக்கும் விதமாக பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் எதிரே இன்று மாலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர்கள் மாட்டுக்கறி கஞ்சியுடன் நோன்பு திறந்து மத்திய அரசுக்கு தங்கள் எதிர்பை காட்டினர். இதில் தமுமுக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அஹமது ஹாஜா மற்றும் தமுமுக வினர் பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் தமுமுக உலமா அணி செயலாளர் அன்சாரி, மாநில ஊடகத்துறை துணை செயலாளர் மதுக்கூர் பவாஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

அதிரையை சேர்ந்தவர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக இரண்டு வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Close